வீடு, வீடாக சுகாதார பணியாளர்கள் ஆய்வு


வீடு, வீடாக சுகாதார பணியாளர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 31 May 2021 11:34 PM IST (Updated: 31 May 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் பகுதியில் வீடு, வீடாக சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் வட்டாரத்தில் மேலப்பூவந்தி, வைகை வடகரை, எருக்களவெள்ளூர், திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் உள்ள 2 வார்டுகளில் கொரோனா தடுப்பு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்  வீடு,வீடாக மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் நேரில் சென்றனர். அங்கு வீட்டில் வசிப்பவர்களிடம் சளி, காய்ச்சல் இருக்கிறதா? என கேட்டறிந்தனர். அதோடு குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவை பரிசோதித்தனர்.
இந்த பணிகளை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி நேரில் பார்வையிட்டார். அவருடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்‌ சேதுராமு உடன் இருந்தார்.


Next Story