கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்
கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு,
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியிடங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி கிணத்துக்கடவு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம், ஆர்.எஸ்.ரோடு, கோவில்பாளையம், தாமரைக்குளம், வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி இ-பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனை மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே வருகின்றனர். முழு ஊரடங்கில் வெளியே வந்ததாக கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம். நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story