277 பேருக்கு கொரோனா; பெண் பலி


277 பேருக்கு கொரோனா; பெண் பலி
x
தினத்தந்தி 31 May 2021 11:47 PM IST (Updated: 31 May 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

277 பேருக்கு கொரோனா; பெண் பலி

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 277 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 16 ஆயிரத்து 783 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 314 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3,305 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 223 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 62 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Next Story