தூய்மை பணியாளர்களுக்கு உணவு


தூய்மை பணியாளர்களுக்கு உணவு
x
தினத்தந்தி 31 May 2021 11:47 PM IST (Updated: 31 May 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு உணவு

சாயல்குடி
முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதில் சாயல்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், ஊராட்சி தலைவர்கள் மணிமேகலை முத்துராமலிங்கம், தென்னரசி செல்லபாண்டியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம் முகைதீன், மீனவர் அணி துணை அமைப்பாளர் அருள் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் உதயசூரியன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், ராஜபாண்டி, காமராஜ், நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், இணைச்செயலாளர் முனீஸ்வரன், நகர மாணவரணி செயலாளர் சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் கொரோனா தொற்று காலம் முடியும் வரை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Next Story