இடிகரை அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை


இடிகரை அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 May 2021 6:17 PM GMT (Updated: 31 May 2021 6:17 PM GMT)

இடிகரை அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இடிகரை

இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட ராமனூஜர் நகரில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் சென்றனர். அப்போது கடை ஊழியர் இன்று (நேற்று) மாத இறுதி நாள் என்பதால் பொருட்கள் வழங்க இயலாது. நாங்கள் தாலுகா அலுவகத்திற்கு கணக்கு கொடுக்க போக வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் பொதுமக்கள், இதுவரை 500 ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை. தற்போது வாங்கவில்லை என்றால் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்கமுடியாது எனவே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும், மேலும் இந்த கடையில் வினியோகம் செய்யும் ரேஷன் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும் கூறி திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். 

இதுகுறித்து அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story