மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு + "||" + Corona Ward

சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு

சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு
சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு செயல்பட தொடங்கியது. அங்கு கொரோனா பாதித்த 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லாமல் இருந்தது. தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பாதித்தவர்களுக்கு உடனுக்கு உடன் சிகிச்சை அளிக்கும் பொருட்டு இந்த ஆஸ்பத்திரியில் புதிதாக 30 படுக்கைகளுடன் வார்டு தொடங்கப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் கொரோனா வார்டு செயல்பட தொடங்கியது. தற்போது கொரோனா பாதித்த 7 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஏற்கனவே 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. தனியார் நிறுவனங்கள் வழங்கிய 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளன.
.