கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமி
உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய சிறுமி
கீழக்கரை
கீழக்கரை பகுதியில் அரசு மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் கூடிய படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு இயங்கி வருகிறது. அதனை பார்வையிட வந்த காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.யிடம் சீதக்காதி சாலையில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் சரவணன் மகள் தக்சிதா என்ற சிறுமி, உண்டியலில் சேர்த்து வைத்த ரூபாய் ஆயிரத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். இதைதொடர்ந்து அந்த சிறுமியை எம்.எல்.ஏ. பாராட்டினார். அப்போது கீழக்கரை முத்துசாமிபுரம் பகுதியில் சுகாதாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் செயலாளர் பாஸித் இலியாஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. யிடம் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story