முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும்-ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு தீர்மானம்


முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும்-ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு  தீர்மானம்
x
தினத்தந்தி 31 May 2021 6:34 PM GMT (Updated: 31 May 2021 6:34 PM GMT)

முன்கள பணியாளராக அறிவிக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் அபுபக்கர் சித்திக், வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் மக்களோடு நேரடி தொடர்பில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிற ஊராட்சி மன்ற தலைவர்களை முன்கள பணியாளர்களாக அரசு அறிவிக்க வேண்டும் என கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்று இருக்கும் மு.க. ஸ்டாலின்,  அமைச்சராக பொறுப்பேற்ற பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்து தெரிவித்தும்,  கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய போதிய நிதியின்றி அனைத்து ஊராட்சி மன்றங்களும் சிரமப்படுகிறது. எனவே அதிக நிதி ஒதுக்கீடு செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story