சாராயம் காய்ச்சிய 6 பேர் கைது
சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆதலால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியிலுள்ள மேட்டமலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக சாத்தூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனை
உடனே சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேட்டமலையை சேர்ந்த பிச்சைகனி மகன் செந்தில்குமார் (வயது 24) என்பதும், இவர் சாராயம் காய்ச்சியதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அசோக்குமார் (24), காளீஸ்வரன் (27), கார்த்திக் (27), தங்கம் (25), காளியப்பன் (25) ஆகியோருடன் சேர்ந்து கள்ளச்சாராய ஊறல் தயார் செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
6 பேர் கைது
இதையடுத்து சாராய ஊறலை கொட்டி அழித்த போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story