3 அரசு அதிகாரிகள் கொரோனாவுக்கு பலி


3 அரசு அதிகாரிகள் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 1 Jun 2021 12:19 AM IST (Updated: 1 Jun 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு அதிகாரிகள் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு அதிகாரிகள் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பஞ்சாயத்து உதவி இயக்குனர் 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகும். விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளும் கொரோனா தொற்றுக்கு பலியாகி வருகிறார்கள்.  விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் கணேசன் (வயது 56). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால் நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். 
வட்டார வளர்ச்சி அதிகாரி
இதேபோன்று காரியாபட்டி துணை வட்டார வளர்ச்சி அதிகாரி தேவராஜன் (56) கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதே போல் கொரோனா பாதிப்புக்கு சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனராக பணியாற்றிய பூங்குழலியும் பலியானார். 
விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு அதிகாரிகள் கொரோனாவுக்கு பலியானது அரசு பணியாளர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story