அரசு மருத்துவமனையில் அதிகாரி ஆய்வு
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடேஸ்வரனிடம் கொரோனா சிகிச்சை வார்டில் எத்தனை படுக்கை வசதி உள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக எத்தனை நோயாளிகள் வருகிறார்கள். மேலும் மருத்துவமனைக்கு வேறு என்னென்ன தேவைப்படுகிறது என்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
Related Tags :
Next Story