மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் சாவு


மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் சாவு
x
தினத்தந்தி 1 Jun 2021 1:34 AM IST (Updated: 1 Jun 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் பரிதாபமாக இறந்தார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 90). இவருடைய மனைவி அருக்காணி(85). ஆடு மேய்க்கும் தொழில் செய்த இவர்கள் ஒன்றாகவே ஆடு மேய்க்க சென்று திரும்புவது வழக்கம். அதேபோல் வீட்டில் தண்ணீர் எடுப்பது முதல் அனைத்து வேலைகளையும் ஒன்றாக இணைந்தே செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அருக்காணி கடந்த 24-ந் தேதி மாலை 4 மணியளவில் இறந்து விட்டார். இதனால் முத்துசாமி மிகுந்த துக்கத்துடன் காணப்பட்டதோடு, சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இதையடுத்து உடல் நலம் குன்றி நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அவர் இறந்துவிட்டார். மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story