பொய்யூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


பொய்யூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Jun 2021 1:35 AM IST (Updated: 1 Jun 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

பொய்யூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே பொய்யூர், கருவிடசேரி, அருங்கால், கல்லக்குடி, கருப்பிலா கட்டளை, செம்மந்தங்குடி, மேலகருப்பூர், ஏழேரி, கீழவண்ணம், பாப்பாங்குளம், வண்ணாரப்பேட்டை, அர்ச்சுனாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2.30 வரை வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story