உப்பிலியபுரம் அருகே மதுவிற்ற மாமனார்-மருமகன் கைது
உப்பிலியபுரம் அருகே மதுவிற்ற மாமனார்-மருமகன் கைது செய்யப்பட்டனர்
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும், கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு( பயிற்சி) சுரேஷ்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் நேற்று உப்பிலியபுரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பச்சபெருமாள்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 50), பாலு (32) ஆகிய இருவரும் தங்களது வீட்டில் மது விற்றது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 980 குவாட்டர் மது பாட்டில்களும், 40 பீர் பாட்டில்களும், ரூ.11 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் மாமனார், மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது நாகநல்லூரில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கணேஷ் (28), தம்மம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (32) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story