திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது


திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 2:06 AM IST (Updated: 1 Jun 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்

திருச்சி
திருச்சி உறையூர் வள்ளுவர் தெருவில் உள்ள பொதுக்குழாய் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை கண்டதும் சீட்டு விளையாடியவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் பணம் வைத்து சூதாடிய உறையூர் வள்ளுவர் தெருவை சேர்ந்த புருசோத்தமன் (வயது 41), சேகர் (55), ஹரி என்ற அருணாசலம் (34), நவாப்தோட்டம் பகுதியை சேர்ந்த ஜவகர் (47), பால்ராஜ் (40), லிங்கநகர் பாஸ்கர் (48), செல்வராஜ் (43), சிவகுமார் (49), திலகர் (49), முருகன் (52) மற்றும் சந்திரசேகர் (49) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1,400 மற்றும் 3 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story