திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்களுக்கு நேர்காணல்


திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்களுக்கு நேர்காணல்
x
தினத்தந்தி 1 Jun 2021 2:15 AM IST (Updated: 1 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது

திருச்சி
கொரோனா தடுப்பு பணிக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 3 மாதங்கள் மட்டும் தற்காலிகமாக பணியாற்ற 57 மருத்துவர்களும், 55 செவிலியர்களும் மற்றும் டெக்னீசியன்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மருத்துவ பணியிடத்துக்கு விண்ணப்பித்தவர்கள் நேற்று காலை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அதன்படி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று காலை நேர்காணல் நடந்தது. அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் விண்ணப்பதாரர்களின் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை சரிபார்த்து தகுதியானவர்களை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதிய பணியிடங்களுக்கான ஊதியம் அரசு விதிகளின்படி வழங்கப்படும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது.


Next Story