பாவூர்சத்திரம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம்
பாவூர்சத்திரம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இருளப்பன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் வட்டார பகுதிகளான பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், மந்தியூர், மீனாட்சிபுரம், பிள்ளைகுளம், ஐந்தாம் கட்டளை, வடமலைப்பட்டி, ஏ.பி.நாடானூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கபசுர குடிநீர் வழங்கினார். வீராசமுத்திரம் ஊராட்சியில் மசூது என்பவரின் வீடு மின்கசிவால் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. அந்த வீட்டையும் அவர் பார்வையிட்டார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன், அருவேல்ராஜ், நகர செயலாளர் சங்கர், தொகுதி செயலாளர் ராதா, மாவட்ட இளைஞரணி செயலாளர் கணபதி, ஒன்றிய துணை செயலாளர் உச்சிமாகாளி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story