ரெயிலில் அடிபட்டு இறந்த மயில்


ரெயிலில் அடிபட்டு இறந்த மயில்
x
தினத்தந்தி 1 Jun 2021 2:21 AM IST (Updated: 1 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்பட்டு மயில் ஒன்று இறந்தது.

திண்டுக்கல்: 

மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 6 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. 

அப்போது ரெயில் என்ஜீனில் ஒரு மயில் சிக்கி இருப்பதை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர். 

அதையடுத்து ரெயில் என்ஜீனில் சிக்கிய மயிலை வெளியே எடுத்தனர். ஆனால், மயில் இறந்து போயிருந்தது. அது சுமார் 2 வயதுடைய பெண் மயில் ஆகும். 

இதனால் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று மயிலின் உடலை கைப்பற்றினர். 

மேலும் திண்டுக்கல் அருகே காட்டுப்பகுதியில் ரெயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே மயில் பறந்து என்ஜீனில் சிக்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

இதையடுத்து மயிலின் உடலை, வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story