மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவர் கொரோனாவுக்கு பலி + "||" + Panchayat leader kills Corona

ஊராட்சி தலைவர் கொரோனாவுக்கு பலி

ஊராட்சி தலைவர் கொரோனாவுக்கு பலி
திருச்சி அருகே கீழரசூர் ஊராட்சி தலைவர் கொரோனாவுக்கு பலியானார்
கல்லக்குடி
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கீழரசூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் சேகர் (வயது 47). இவர் கல்லக்குடியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் ஒப்பந்ததாரராகவும் இருந்தார்.  இந்தநிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி கீழரசூர் கிராமத்தில் மருத்துவ குழுவினரை அழைத்து கொரோனா பரிசோதனை முகாம் நடத்தினார். அதில் தானும் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் சேகருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார்.

பின்னர் கொரோனாவுக்கு பலியான ஊராட்சி மன்ற தலைவர் சேகரின் உடல் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள குடமுருட்டி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இறந்த சேகருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் கொரோனாவுக்கு பலியானதால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.