சுரண்டையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு


சுரண்டையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு
x
தினத்தந்தி 1 Jun 2021 2:47 AM IST (Updated: 1 Jun 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் தூய்மை பணியாளர்களுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

சுரண்டை:
உலக பசியில்லா தினத்தை முன்னிட்டும், கொரோனா ஊரடங்கையொட்டியும் சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்களுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மதிய உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் சுரண்டை நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் வெங்கட கோபு, நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து, சின்னநாடானூரில் உள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், ஆவுடையானூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லப்பா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, பள்ளி நிர்வாகி தனசிங், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 113 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story