கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
கடையநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆய்க்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் புள்ளி மான் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தவாறு கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் கடையநல்லூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வனச்சரகர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், வனவர் அம்பலவாணன், வன காப்பாளர் பெருமாள், வேட்டை தடுப்பு காவலர் முத்துமாரி ஆகியோர் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து அந்த மானுக்கு கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அதனை ஆய்க்குடி பகுதியில் உள்ள மான்கள் சரணாலயத்தில் விட்டனர்.
Related Tags :
Next Story