சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேர் கைது


சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 2:56 AM IST (Updated: 1 Jun 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை:
சுரண்டை அருகே கடையாலுருட்டியில் உள்ள தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சப்படுவதாக சேர்ந்தமரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது கடையாலுருட்டி ஊருக்கு கீழ்புறம் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்ச முயன்ற, அப்பகுதியைச் சேர்ந்த மயில்ராஜ் (வயது 40), சாமிசங்கர் (55), சாம்பவர்வடகரையைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 70 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்து அழித்தனர்.

Next Story