மாவட்ட செய்திகள்

ஆற்காட்டில் மாமியார் வீட்டில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை + "||" + Driver commits suicide by hanging

ஆற்காட்டில் மாமியார் வீட்டில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

ஆற்காட்டில் மாமியார் வீட்டில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
ஆற்காட்டில் மாமியார் வீட்டில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
ஆற்காடு

ஆற்காடு மேனேஜர் தெருவைச் சேர்ந்தவர் பிரபுதேவா (வயது 29). டாஸ்மாக் வேன் டிரைவர். இவரது மனைவி டில்லி ராணி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் -மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் பிரபுதேவாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த பிரபுதேவா ஆற்காடு கலாப்பா தெருவிலுள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்று யாருமில்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்துபார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக  தெரிவித்தனர்.

 இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.