தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு மேலும் 340 பேருக்கு தொற்று உறுதி


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு மேலும் 340 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 Jun 2021 5:57 AM IST (Updated: 1 Jun 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு மேலும் 340 பேருக்கு தொற்று உறுதி

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
340 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 340 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,099 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 358 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மேலும் 340 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 3079 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 129 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
=====

Next Story