கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மதுபானங்கள் கடத்திய 5 பேர் கைது சரக்கு வாகனங்கள், மோட்டார்சைக்கிள் பறிமுதல்


கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மதுபானங்கள் கடத்திய 5 பேர் கைது சரக்கு வாகனங்கள், மோட்டார்சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jun 2021 12:27 AM GMT (Updated: 1 Jun 2021 12:27 AM GMT)

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மதுபானங்கள் கடத்திய 5 பேர் கைது சரக்கு வாகனங்கள், மோட்டார்சைக்கிள் பறிமுதல்

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநில மதுபானங்கள் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சரக்கு வாகனங்கள், மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுபாட்டில்கள் கடத்தல்
தமிழகத்தில் முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருப்பதால், கர்நாடக மாநில மதுபானங்களை கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு கடத்தி அதிக விலைக்கு விற்பதும் சோதனைச்சாவடிகளில் வாகனங்களுடன் சிலர் கைதாவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கன்னண்டஅள்ளி அருகே மத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த நாகூரான் (வயது 40) மற்றும் பாக்கியராஜ் (29) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் 200 மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்த போலீசார் மோட்டார்சைக்கிள் மற்றும் மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேர் கைது
அதேபோல் சரக்கு ஆட்டோவில் மறைத்து மது பாக்கெட்டுகள் கடத்திய செங்கம் அடுத்த கொட்டகுலத்தை சேர்ந்த ராஜ்கமல் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 மதுபாக்கெட்டுகளுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை கடத்திய தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை சேர்ந்த அருண்குமரன் (26), கோவையை சேர்ந்த உசேன் ஷெரீப் (32) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 576 மது பாக்கெட்டுகளையும், 2 சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெங்களூருவில் இருந்து கர்நாடக மாநில மதுபானங்களை கடத்திய 5 பேரையும், 2 சரக்கு வாகனம், ஒரு லோடு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மதுபானங்களின் மதிப்பு 65 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.
=======

Next Story