கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி மேலும் 455 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி மேலும் 455 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி, ஜூன்.1-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியான நிலையில் மேலும் 455 பேருக்கு தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 42 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கடந்த 26-ந் தேதி வேலூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதே போல கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 26-ந் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
அதே போல 65 வயது மூதாட்டி, கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். மேலும் 85 வயது முதியவர் கொரோனா பதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 57 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் கடந்த 28-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
455 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 632 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரத்து 511 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 5 ஆயிரத்து 29 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
======
Related Tags :
Next Story