தாய் கண்டித்ததால் என்ஜினீயர் தற்கொலை


தாய் கண்டித்ததால் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2021 6:04 AM IST (Updated: 1 Jun 2021 6:04 AM IST)
t-max-icont-min-icon

தாய் கண்டித்ததால் என்ஜினீயர் தற்கொலை

கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே டானிங்டன் காந்தி நகரை சேர்ந்தவர் சாலமன் டைட்டஸ். இவருடைய மனைவி இம்மாகுலேட் ரெமிஜிஸ். இவர்களது மகன் எரிக்ரெக்ஸ் தாம்சன்(வயது 23). என்ஜினீயர். இவர் தினமும் நண்பர்களுடன் வெளியே சென்று விளையாடிவிட்டு வருவது வழக்கம். 

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதாலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாலும் வெளியே செல்ல வேண்டாம் என்று அவரது தாயார் இம்மாகுலேட் ரெமிஜிஸ் கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த எரிக்ரெக்ஸ் தாம்சன் நேற்று மதியம் தனது அறையில் விஷம் குடித்து மயங்கினார். 

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி எரிக்ரெக்ஸ் தாம்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story