காந்தல் சாலைக்கு ‘சீல்’ வைப்பு
காந்தல் சாலைக்கு ‘சீல்’ வைப்பு
ஊட்டி
ஊட்டி அருகே காந்தலில் இந்திரா நகர், குருசடி காலனி, கஸ்தூரிபாய் காலனி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
வீடுகள் நெருக்கமாக உள்ளதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தலில் மூவுலக அரசியம்மன் கோவில் முன்பு இருந்து பென்னட் மார்க்கெட் வரை உள்ள சாலை ‘சீல்’ வைத்து தகரம் கொண்டு மூடப்பட்டு உள்ளது.
தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகளில் குறைந்த வீடுகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதன் எதிரொலியாக அதிக வீடுகளை தனிமைப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story