மாவட்ட செய்திகள்

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அருகே அமர்ந்து உணவு சாப்பிடும் அவலநிலை + "||" + Chikkamagaluru Government Hospital Near the body of the person who died of corona Eating Disorders

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அருகே அமர்ந்து உணவு சாப்பிடும் அவலநிலை

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அருகே அமர்ந்து உணவு சாப்பிடும் அவலநிலை
சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அருகே அமர்ந்து உணவு சாப்பிடும் அவலநிலை சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பு.
சிக்கமகளூரு,

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்தவரின் உடல் அருகே அமர்ந்து மற்றொரு கொரோனா நோயாளியின் உறவினர் உணவு சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரி தற்போது மாநில அளவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு சிறந்த மருத்துவமனையாக விளங்கி வருகிறது. மேலும் இதுவரையில் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் படுக்கைகள் பற்றாக்குறையோ, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறையோ இருந்தது கிடையாது. இந்த நிலையில் சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியின் ஒரு அவலநிலை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். அவரது உடலை அவர் படுத்திருந்த படுக்கையில் வைத்தே ஆஸ்பத்திரி ஊழியர்கள் பாலிதீன் பை மூலம் மூடுகின்றனர். மேலும் அவரது உடலை பாலிதீன் பையால் கட்டுகின்றனர்.

அங்கு மற்ற கொரோனா நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் ஹாயாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் இறந்தவரின் அருகே மற்றொரு கொரோனா நோயாளியின் உறவினர் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற அவலநிலைதான் அந்த ஆஸ்பத்திரியில் நிலவுகிறது. அந்த வீடியோவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் அந்த வீடியோவைப் பார்த்து அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.