மதுராந்தகம் அருகே வெளிமாநில மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
மதுராந்தகம் அருகே வெளிமாநில மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்,
மதுராந்தகம் அருகே வெளிமாநில மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்துக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து அவர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி தலைமையில் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ், சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்தவத்சலம் ஆகியோர் நேற்று மதுராந்தகம்-தச்சூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தேவாதூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்கிற வினோத்குமார் (வயது 35) காரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 615 மது பாட்டில்கள், 2 லிட்டர் சாராயம் போன்றவற்றை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
போலீசார் அலெக்சை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில், சாராயம், கார் போன்றவற்றை கைப்பற்றி செய்யூர் குற்றவியல் நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story