திருவள்ளூர் செஞ்சி ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு
திருவள்ளூர் செஞ்சி ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு பணி நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி ராஜ் தலைமையில் வீடு வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்.
அவருடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன், ஊராட்சி செயலாளர் கீதா மற்றும் பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story