திருவள்ளூர் ரெயிலில் மது கடத்தியவர் கைது
கொரோனா தொற்று பரவலையொட்டி வருகிற 7-ந்தேதி வரை எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பி்க்கப்பட்டுள்ளது.
காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மது கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் ரெயில் மூலம் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. இதனை கண்காணிக்க வேண்டும் என ரெயில்வே இருப்புப்பாதை காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கிரி மற்றும் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த பயணிகளை போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
அப்போது திருவள்ளூர் கற்குழாய் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 33) என்பவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அவர் ஆந்திராவில் இருந்து திருட்டுத்தனமாக கடத்தி வந்த 28 மதுபாட்டில்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அதனை திருட்டுத்தனமாக் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story