எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பேகம்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் சேக்அப்துல்லா, பொருளாளர் சையது முகமது, தொகுதி செயலாளர் சகாப்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது 13 மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்தை மறைமுகமாக அமல்படுத்தக் கூடாது என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் அனைவரும் சமூக இடைவெளியுடன் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story