‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’; ஏழைகளுக்கு இலவசமாக வாழைப்பழம் வழங்கும் விவசாயி


‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’; ஏழைகளுக்கு இலவசமாக வாழைப்பழம் வழங்கும் விவசாயி
x
தினத்தந்தி 1 Jun 2021 10:04 PM IST (Updated: 1 Jun 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு விவசாயி ஒருவர் இலவசமாக வாழைப்பழம் வழங்கி வருகிறார்.

கம்பம்:
கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஏழை-எளிய மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஆதரவற்றவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 
இவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர், போலீசார் என பல தரப்பினரும் அத்தியாவசிய பொருட்கள், உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கணேசன் (வயது 38) என்ற விவசாயி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு, தனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை இலவசமாக வழங்கி வருகிறார். 
மேலும் இதற்காக அவர் அமைத்துள்ள தள்ளுவண்டி கடையில் தகவல் பலகை ஒன்று வைத்துள்ளார். அதில், ‘பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று எழுதி வைத்துள்ளார். இதை பார்க்கும் ஏழை-எளிய மக்கள் வாழைப்பழத்தை இலவசமாக எடுத்துச் செல்கின்றனர். கணேசனின் இந்த சேவையை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.  

Next Story