1,338 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 5-வது நாளாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று 1,338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியானார்கள்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 5-வது நாளாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று 1,338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியானார்கள்.
1,338 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக கொரோனா தோற்று குறைய தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 1,338 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபோல் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் வரும்வரை அவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
8 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 62 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 1,042 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 43 ஆயிரத்து 219 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 50 வயது ஆண், 70 வயது பெண், 69 வயது ஆண், 65 வயது பெண் 70 வயது பெண், 60 வயது பெண், 78 வயது ஆண், 38 வயது ஆண் என 8 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.
1,489 பேருக்கு தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி ஆயிரத்து 229 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 260 பேரும் என 1,489 பேர் நேற்று தடுப்பூசி போட்டுள்ளனர்.
Related Tags :
Next Story