போடி அருகே சுகாதார பணிகள் செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
போடி அருகே சுகாதார பணிகள் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி:
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1 மற்றும் 2-வது வார்டு பகுதிகள், போடி நகராட்சியை ஒட்டி திருமலாபுரம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ளது. இந்த பகுதி தனியாக உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாயை தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் செய்யப்படுவதில்லை.
இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் சுகாதார பணிகள் செய்யாததை கண்டித்து மேலச்சொக்கநாதபும் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 2-வது வார்டு பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினருடன் சேர்ந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நகர அமைப்பாளர் ஏ.டி.கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story