மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்ற அண்ணன், தம்பி உள்பட 5 பேர் கைது
மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்ற அண்ணன், தம்பி உள்பட 5 பேர் கைது
இடிகரை
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் மதுக்கடை உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன.
இதற்கிடையே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதை தடுக்க கோவை மாவட்ட மதுவிலக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் மேற்பார் வையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பால முருகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, முனுசாமி, அப்துல் முத்தலிப் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் அரசு பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார், ஒரு வேன் ஆகியவற்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த வாகனங்களில் 420 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விசாரித்த போது வாகனங்களில் வந்தவர்கள், மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவரின் மகன் அசாருதீன் (வயது 24), செல்லப்பா என்பவரின் மகன் மணிகண் டன் என்ற முகமது சித்திக் (24), மேட்டுப்பாளையம் கூடுதுறை மலை யை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சீனிவாசன் (37), அவரு டைய தம்பி மாரிமுத்து (32), அதேபகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் சிவகுமார் (41) என்பது தெரியவந்தது.
அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, கோவையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story