6 மாத கர்ப்பிணி தற்கொலை


6 மாத கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2021 10:09 PM IST (Updated: 1 Jun 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

விருப்பாட்சி அகதிகள் முகாமில் 6 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

சத்திரப்பட்டி:

ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜீவிதா (வயது 31). இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டார். 

இதனையடுத்து மனைவியை விவாகரத்து செய்த, விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அருள்மோகன் (37) என்பவரை 2-வதாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஜீவிதா திருமணம் செய்து கொண்டார். 

அருள்மோகன் செல்போன் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். ஜீவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் அவர், விருப்பாட்சி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தனது வீட்டில் ஜீவிதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜீவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஜீவிதாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story