350 படுக்கைகளுடன் தயாராகிவரும் சிகிச்சை மையங்கள். அமைச்சர் காந்தி ஆய்வு


350 படுக்கைகளுடன் தயாராகிவரும் சிகிச்சை மையங்கள். அமைச்சர் காந்தி ஆய்வு
x
தினத்தந்தி 1 Jun 2021 10:18 PM IST (Updated: 1 Jun 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 350 படுக்கைகளுடன் தயாராகி வரும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் தாய் சேய் நலப்பிரிவு கட்டிடத்தில் கொரோனா நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு, ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 50 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு வரும் கூடாரம் மற்றும் படுக்கைகள், மின்விசிறிகள், கழிப்பறைகள் ஆகியவைகள் அமைக்கும் பணியினை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டார்.

4-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவு

பின்னர் ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 கூடுதல் படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ள சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.
அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து 350 படுக்கைகளையும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க வருகிற 4-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சிவன் அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணி, அரசு டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story