ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கை இழக்கவில்லை: பனை மரத்தில் ஏறி பதனீர் இறக்கும் மாற்றுத்திறனாளி

ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கை இழக்கவில்லை: பனை மரத்தில் ஏறி பதனீர் இறக்கும் மாற்றுத்திறனாளி
x
தினத்தந்தி 1 Jun 2021 10:31 PM IST (Updated: 1 Jun 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத்திறனாளி ஒருவர் பனைமரத்தில் ஏறி பதனீர் இறக்குகிறார்.

சாத்தான்குளம், ஜூன்:
ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத்திறனாளி ஒருவர் பனைமரத்தில் ஏறி பதனீர் இறக்குகிறார்.

பனையேறும் தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரத்தைச் சேர்ந்தவர் சந்தன சிலுவை (வயது 68). ஒலிப்பெருக்கி உரிமையாளரான இவர் பனையேறும் தொழிலாளியாக உள்ளார்.
இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சையின் மூலம் இடது கால் அகற்றப்பட்டது.. எனினும் தன்னம்பிக்கை இழக்காத சந்தன சிலுவை ஒற்றைக் காலிலேயே பல ஆண்டுகளாக பனை மரங்களில் ஏறி பதனீர் இறக்கி வருகிறார்.

தன்னம்பிக்கை இழக்காத...

பனை மரங்களில் ஏணியை கயிற்றால் கட்டி வைத்து, அதன் வழியாக சந்தன சிலுவை லாவகமாக ஏறி பதனீர் இறக்குகிறார். காலையிலும், மாலையிலும் ஏராளமான பனை மரங்களில் ஏறி பதனீர் இறக்குகிறார்.  ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் பனைமரம் ஏறும் தொழிலாளியை பொதுமக்கள் வியந்து பாராட்டுகின்றனர்.

Next Story