கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யலாம்
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயின் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்த செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழுவிற்கான மின்னஞ்சல் முகவரி tnngocoordination@gmail.com. தன்னலம் கருதாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட இக்குழுக்கள் பாலமாக செயல்படும். எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்து இப்பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை 04146- 222288 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரியான dswovillupuram@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story