மது பாட்டில்களை திருடிச்சென்ற 4 பேர் கைது


மது பாட்டில்களை திருடிச்சென்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2021 10:49 PM IST (Updated: 1 Jun 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரை துளையிட்டு ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச்சென்ற 4 பேரை அலங்கியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரம்
தாராபுரம் அருகே டாஸ்மாக் கடை ஷட்டரை துளையிட்டு ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச்சென்ற 4 பேரை அலங்கியம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுபாட்டில்கள் திருட்டு
தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் கடந்த 28-ந்தேதி இரவு அலங்கியத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஷட்டரை கட்டிங் எந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 555 மதுபாட்டில்களை திருடி சென்றனர். அதன் மதிப்பு ரூ.77 ஆயிரம் ஆகும்.
இது குறித்து கடையின் கண்காணிப்பாளரான கணியூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அலங்கியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  கண்ணன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர்.
4 பேர் கைது
தனிப்படை போலீசார் அந்த பகுதியில் சம்பவத்தன்று செயல்பட்ட செல்போன் எண்களை வைத்து ஆராய்ந்து வந்தனர். அப்போது செல்போன் சிக்னல் பழனி பகுதியை காட்டியது. அதனை தொடர்ந்து அலங்கியம் போலீசார் பழனி விரைந்து சென்றனர். அந்த எண்ணில் தொடர்புடைய நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் தெரிவித்தார். 
இதனைத் தொடர்ந்து அவர்களை அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது மது பாட்டில்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து பழனியை அடுத்த ஆண்டிய நாய்க்கன் வலசு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 28), மாரிமுத்து (35), நவநீதன் (25), பொன்னரசு (25) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.77ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து 4பேர்களையும்கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story