தட்டுப்பாடு காரணமாக வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி மையம்


தட்டுப்பாடு காரணமாக வெறிச்சோடிய கொரோனா தடுப்பூசி மையம்
x
தினத்தந்தி 1 Jun 2021 10:56 PM IST (Updated: 1 Jun 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

தட்டுப்பாடு காரணமாக ஊட்டியில் கொரோனா தடுப்பூசி மையம் வெறிச்சோடியது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய தடுப்பூசி இன்னும் வராததால் நாளை (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது.

 இந்த நிலையில் நேற்று ஊட்டி தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காலை முதலே வந்தனர். 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் பின்னர் வந்தவர்கள் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பள்ளி வளாகம், மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரிக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு ஏற்ப செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 1,200 கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.

Next Story