கிருஷ்ணகிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி


கிருஷ்ணகிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி
x
தினத்தந்தி 1 Jun 2021 11:32 PM IST (Updated: 1 Jun 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

மேலும் ஒரு சிறுவன் பலி

பர்கூர்:
கிருஷ்ணகிரி அருகே, லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலியானதை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
5 பேர் பலி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள துரிஞ்சி தலைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). பெங்களூருவில் வெல்டிங் ஷாப் வைத்துள்ள அவர் குடும்பத்துடன் ஆம்னி வேனில் குடியாத்தத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் மீண்டும் நேற்று முன்தினம் மதியம் பெங்களூரு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே சுண்டம்பட்டி என்னும் இடத்தில் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்த போது, சாலையோரம் நின்ற கியாஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த ரமேஷ், அவரது மனைவி தீபா (30), மகன் நித்தீஷ் (1), உறவினர்கள் அஞ்சலி (34), சரளா (35) ஆகிய 5 பேர் இறந்தனர்.
6 ஆக உயர்வு
மேலும் காரில் இருந்த சரளாவின் குழந்தைகள் சாரிகா (9), ஓவியா (5) மற்றும் சதீஷ்குமார் என்பவரின் மகன் நித்தின் (11) ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவன் நித்தின் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு இறந்தான். இதன் மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story