நாமக்கல் நகராட்சியில் மளிகை பொருட்களை வீடுகளுக்கு ‘டோர் டெலிவரி’ செய்ய 38 சில்லரை கடைகளுக்கு அனுமதி
நாமக்கல் நகராட்சியில் மளிகை பொருட்களை வீடுகளுக்கு ‘டோர் டெலிவரி’ செய்ய 38 சில்லரை கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் நாமக்கல் நகராட்சி சார்பில் சுமார் 50 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வீதி, வீதியாக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மளிகை பொருட்களையும் டோர் டெலிவரி செய்ய 38 சில்லரை விற்பனை கடைகள் மற்றும் 3 மொத்த விற்பனை கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. பொதுமக்கள், நகராட்சியால் அனுமதிக்கப்பட்ட 38 கடைகளுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டால், சம்பந்தப்பட்ட கடையினர் வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்களை வினியோகம் செய்வார்கள் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடைக்காரர்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story