நாமக்கல் மாவட்டத்தில் 914 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது


நாமக்கல் மாவட்டத்தில் 914 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 1 Jun 2021 11:42 PM IST (Updated: 1 Jun 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது.

நாமக்கல்:
914 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டங்களை சேர்ந்த 2 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 296 ஆனது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 914 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 210 ஆக அதிகரித்து உள்ளது.
7,285 பேருக்கு சிகிச்சை
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 615 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 25 ஆயிரத்து 663 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 262 பேர் இறந்து விட்ட நிலையில், 7 ஆயிரத்து 285 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story