கந்தம்பாளையம் அருகே வீடு புகுந்து திருடிய ரிக் வண்டி டிரைவர் கைது
கந்தம்பாளையம் அருகே வீடு புகுந்து திருடிய ரிக் வண்டி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள ராமதேவம் பகுதியை சேர்ந்தவர் கோட்டை அம்மாள். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். மதியம் இவரது மகன் வீட்டுக்கு வந்தபோது, கதவு திறக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டில் வைத்திருந்த ரூ.77 ஆயிரத்து 800 திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோட்டை அம்மாள் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ரிக் வண்டி டிரைவரான தினேஷ் (வயது 33) என்பவர் கோட்டை அம்மாள் வீட்டில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.77 ஆயிரத்து 800-ஐ பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story