சோலையார் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்வு
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே அந்த அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்து இருக்கிறது.
வால்பாறை
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே அந்த அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்து இருக்கிறது.
சோலையார் அணை
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட (பி.ஏ.பி.) பாசனத்துக்கு முக்கிய அணையாக சோலையார் உள்ளது. வால்பாறை அருகே உள்ள இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 160 அடி ஆகும்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் நீர்வரத்து மிகவும் குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து 2 அடியாக மாறியது.
இதனால் நீர்த்தேக்க பகுதியில் ஆங்காங்கே குட்டைகள் போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது.
மழை பெய்தது
இந்த நிலையில் வால்பாறையில் மழை பெய்தது. பகலில் லேசாகவும், இரவு நேரத்தில் கனமழையாகவும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக வறண்டு கிடந்த ஆறுகள், நீர்நிலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
குறிப்பாக இங்குள்ள கூழாங்கல் ஆறு, வாழைத்தோட்டம் உள்பட அனைத்து ஆறுகளிலும் இருகரைகளை தொட்டபடி வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் சோலையார் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
நீர்மட்டம் 31 அடியாக உயர்வு
தொடர்ந்து வால்பாறை பகுதியில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 31.58 அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பருவமழை பெய்ய தொடங்கினால் அணைக்கு இன்னும் அதிகமாக தண்ணீர் வரத்து ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறும்போது, பொதுவாக சோலையார் அணையில் மே மாதத்தில் அதிகபட்சமாக 5 அடி தான் தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில்தான் 30 அடியை தாண்டி தண்ணீர் இருக்கிறது.
இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால், மழை பெய்யும்போது அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்றனர்.
மழையளவு
வால்பாறை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டர்) விவரம் வருமாறு:-
வால்பாறை 15 மி.மீ., அப்பர் நீராறு 18, லோயர் நீராறு 17, சோலை யார் அணை 17 மி.மீ. மழை பெய்து இருக்கிறது.
Related Tags :
Next Story