மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Jun 2021 11:56 PM IST (Updated: 1 Jun 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மோட்டார் சைக்கிளை திருடிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி பாலக்கரை மைக்கேல் பிள்ளை தெருவை சேர்ந்த சிவானந்தத்தின் (வயது 28) மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு நடத்தியபோது 3 பேர் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில், அவர்கள் பாலக்கரை ஜெயில் பேட்டையை சேர்ந்த கிளிண்டன் என்கிற அஜீத் (22), ஜெயசீலன் (19) மற்றும் பீமநகரை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், 3 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசாா் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story