2 கிலோ கஞ்சா பறிமுதல்


2 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jun 2021 11:58 PM IST (Updated: 1 Jun 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மணமேல்குடி, ஜூன்.2-
மணமேல்குடி கடற்கரையில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா பதுக்கல்
புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடியை அடுத்த பட்டங்காடு கடற்கரை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக  மணமேல்குடி போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் பட்டங்காடு கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அங்குள்ள அலையாத்தி காடுகளில் 2 கிலோ கஞ்சா மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பட்டங்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது24), சாமியப்பன் (27), ராமு (24), அன்பழகன் (26),  புதுக்குடியை சேர்ந்த ஸ்ரீராம் (24) உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இலங்கைக்கு...
மேலும் இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக  பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட 3 பேரை மணமேல்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story